எனது அன்பு வாசகர்களுக்காக கட்டுரைகள், கவிதைகள், கதைகள், சமூகவியல், உளவியல் என்ற அனைத்தையும் சுமந்து வருகிறது வலி தரும் பயணங்கள்

Pages

Tuesday, November 1, 2011


இன்று உன் மடி தேடி வரப்போகும் பெண் பிள்ளையாய்

மாமி மகளாய் நீ
உறவுகளிலும் பிரியவில்லை நாம்.
இருப்பினும் நான் வெளிநாட்டில்
உன்னை விட்டு விட்டு வந்த பொழுதுகளில்
உனது பிரிவை எண்ணி எண்ணி
நான் கண் கலங்கிய நாட்கள்
கண் முன்னே வந்து போகிறதடி..!!


இன்று நீ தாயாகும் செய்தி
என் காதோரம் வந்து விழ
வான வீதியில் மிதக்கிறேன்...!


அன்று எனக்காய் ஆறுதல் தேடி....
என் மடி நனைத்து நீ அழுத காட்சிகள்....
எனை முத்தமிட்டு
 பிரிவை சொன்ன வார்த்தைகளெல்லாம்........
நெஞ்சில் நிழலாடுதடி.....!!


இன்று உன் மடி தேடி வரப்போகும்
 பெண் பிள்ளையாய்....
முத்தமிட்டு ரசிக்கும் நீயே - என் அன்னையாய் ....
இந்த பிறவியிலேயே வாய்க்க
வரம் கேட்டு பெற்றவன் நானடி......!

அஸ்லம் பரீட்

Tuesday, August 2, 2011


புதியதொரு றமழான்

புனிதர்கள் புண்ணகைக்க
புனிதமிகு றமழானே
புகுந்திடுவாய் பூமிதனில்
வற்றாத உன்கருணை
சுமந்துவரும் றமழானே

லைலத்துல் கதிர் இரவை 
எமக்களித்த றமழானே
வரண்ட உள்ளங்கள் ஈரமாகிப்போய்விடவே
பாவக்கரைகள் இங்கு 
கரைந்தோங்கிப் போய்விடவே
புகுந்திடுவாய் ரமழானே

கடல் அலையாய் எழுந்துநின்று
கழுவிச் செல்வாய் ரமழானே
எம்செல்வம் அனைத்தையுமே
தூய்மையாக்கிசென்றிடுவாய்

மூடியமரைகள் இங்கு இராகம் பாடிடுமே
குருட்டு விலக்களும் சுஜுதில் விழுந்திடுமே
கற்கள் சுமந்தவயிர்
மகிழ்ச்சியாள் மிஞ்சிடுமே
தூங்கிக் கழித்த பொழுது 
புனிதமாகிப் போய் விடுமே

இருளடைந்தஉள்ளங்கள் 
ஒளிர்விட்டு பிராகாசிக்கும்
இரைஇல்லங்கள் இங்கு
பூத்துக்குலுங்கிடுமே
இறையச்சம் வழிந்தோடி
உள்ளங்கள் நிரைந்திடுமே

மான்பான மனித குலம்
நெறிபிரழா வாழ்வுதனை
மீழாய்வு செய்திடவே
புகுந்திடுவாய் ரமழானே

நிலவொளியாய் 
எமக்கழித்த வெகுமதியாம் 
திருமறையை தந்திட்ட
புனித மிகு ரமழானே
புகுந்திடுவாய் பூமிதனில்

சத்தியம் நிலைத்தோங்க 
போர்க்களங்கள் தந்திட்ட ரமழானே
புகுந்திடுவாய் பூமிதனில்

உனைச் சுமக்க விழித்திருப்பேன்
பொழுதுகளாய் பசித்துதிருப்பேன்
இராப் பொழுதுகளில்
அவன் அடிமையாய் மண்டியிடுவேன்
உம்மி நபிக்கு என் சலவாத்தை கூரி நிற்பேன்
ஏழை எழியோறுக்கு 
என் கடமைதனைச் செய்திடுவேன் 
உற்றாறும் சுற்றாறும்
மகிழ்சிசியாக வாழ்ந்திடவே
இனிதாக வாழ்திடுவேன்

பாவம் கரைசேர கண்ணீரை கரைத்தடுவேன்
பன்பொழுகும் வாழ்வுதனை
சீராக பெற்றிடவே
தியாகம் தலைத்தோங்கி 
தீன்பனியும் செய்திடுவேன்

சத்தியம் உறுதிபெற
உரமாக மாறிடுவேன்
இறைசொன்ன வியாபரம்
அவனிடத்தில் செய்திடுவேன்
எத்தடைகள் வந்திடினும்
சத்தியம் காத்திடுவேன்
புனிதனாக வாழ்திடுவேன்

முன்ஸிப் பரீட்

Thursday, July 21, 2011


ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

தூக்கனாம் குருவியின் ரீங்காரமும்
குயிலின் இன்னிசையும்
சில்லென்று வீசும் காற்றும்
புழுதியில் புரலும் குழந்தைகளும்
தெருவோரத்து நாய்களும்
ஒற்றையடிப் பாதையும் 
எனக்கு நினைவுக்கு வருகிறது


சிவக்கொழுந்தின் மகள் 
சக்கரம் விளையாடும் சின்னவளும்
வயல் வெளியில் 
குருவி விரட்டும் சீவகனும் 
எனக்கு நினைவில் இருக்கிறது.


கொள்ளைப் பக்கமாக புளுத்தேடி 
மீன் பிடிக்கும்
தண்ணீர் மடுவும்
தாடி வளர்த்த கருப்பன் கிடாயும்
எனக்கு ஞாபகம் இருக்கிறது


அவித்த மரவள்ளியும்
இடித்த சம்பலும்
எருமைப் பாலும் பருகியது 
எனக்கு 
ஞாபகம் இருக்கிறது


விதைநெல்லைத் தூவி 
கலந்தர் லெப்பை ஆலிம்
ஓதிய பாத்திஹாவும்
பால் பொங்கவவைத்து 
புக்கை சமைத்து பரிமாhரியதும் 
எனக்கு ஞாபகம் இருக்கிறது


கச்சையோடு உழுகும் அப்புவும் 
வயல் வெளியில் வரம்புகளில்
தும்பி பிடித்து விளையாடியதும் 
பண்டார அய்யாவின் 
தென்னந் தோப்பில்
களவில் இளநீர் பறித்ததும்
எனக்கு ஞாபகம் இருக்கிறது


சிவக்கொழுந்தின் மகன் 
சிவலிங்கமும் நானும் 
கிட்டிப்புல் விளையாடியது 
தெருவோரத்து சண்டையில்
சின்னமுத்துக்கு கன்னத்தில் அடித்ததும்
எனக்கு ஞாபகம் இருக்கிறது


வேளாமை வெட்டி 
பொங்கல் வைத்து 
பொதிர் திண்டதும் 
எனக்கு ஞாபகம் இருக்கிறது


குனிந்து வணங்கி மரியாதை செய்து 
என் பாட்டனை போடியார் 
என்று அழைக்கும் 
அப்புவின் குரலும் 
எனக்கு ஞாபகம் இருக்கிறது


என் பாட்டன் மிடுக்குக்காய் 
சால்வையைத் தூக்கி 
தோலில் போடும் சால்வையும் 
எனக்கு நினைவுக்கு வருகிறது


சோகை இழந்து நிற்கும் 
வேலைக்காரன் கம்பு புசலும் 
எனக்கு நினைவில் இருக்கிறது
என் வயல் வெளியும் காடாகி 
தெருவும் காடாகி
நினைவிழந்து போனது எனது கிராமம்

முன்ஸிப் பரீட்

Wednesday, July 6, 2011

விடியலைத் தேடி

தேய்ந்து போன

இராப்பொழுதுகளைத் தேடி

தூசு படிந்து போன காற்பாதங்களும்

நரைத்துப் போன எங்கள் தலைமுடியும்

கிழடுபத்திப் போன ஒட்டகங்களும்

நீண்டு வளர்ந்த பரட்டுத் தலைகளோடும்

நீண்டதாய் வளர்நது சுருண்டு போன

தாடியும் சாட்சியாக


இராப் பொழுதுகளிலிருந்து

அதோ தொலைவில் தெரிகிர

ஒளிக் கீற்றுக்களைத் தேடி

முதுகுகளில் பரம்பரைப் பரம்பரையாக

கணத்துப் போன சுமைகளோடும்

முதலில் தொடங்கிய புள்ளியிலிருந்து

தொடர்கிறது எமது பயணம்


கீறிக் கிழிக்கும் முற்களுக்குள்ளும்

பரந்து விரிந்த பாலைவண மணல்களிலும்

ஓங்கி வளர்ந்த காடுகள் மலைகளிலும்

சீரிப்பாயும் மிருகங்களோடும்

இடைவிடாது அயர்ந்து விடாது

செல்கிறது காற்பதங்கள்


எங்கள் அப்பாவித் தனத்தைப் பார்த்து

பல் இழிக்கிறது வல்லூர்கள்

பாவம் மின்மினிப் பூச்சுகள் கூட

ஒளிர் கொடுத்து உதவுகிறது

எங்கள் பயணத்தைத் தொடர

பயணத்தின் முடிவில்

வெற்றியின் ஒளிக் கீற்றுக்கள்

நெறுங்கிக் கொள்கிறது போல

கனவுகளோடு


வானம் எங்கள் முகத்தில்

எச்சிலைத் துப்புகிறது விடியலைத் தந்து

நிலா எங்களுக்கு வழிகாட்டுகிறது

பயணத்தைத் தொடர


வாழ்தலுக்கான சவால்களோடு

சூனியமாகிப் போன தேசத்திலிருந்து

காலத்தை சமைக்கின்ற இலக்குகளோடு

எதிர்காலத்தின் ஒளிக் கீற்றுக்களைத் தேடி

இடைநடுவில் கிறீடங்கள் சுமந்து

கொள்ளும் நாட்டாமைகளும்

வேசியின் பல்லிழிபுக்களோடும்

ஏடுகளில் விரிந்து தோற்றுப் போன

கொல்கை மூட்டைகளோடும்

துருப் பிடித்துப் போன நாட்காளிகளோடும்

அயர்ந்து விடாமல் தொடரும்

எமது பயணம்

புலரும் பொழுதாவது

நமக்கென்று விடியும் நம்பிக்கையோடு

முன்ஸிப் பரீட்

Tuesday, June 28, 2011


மாமன் மனசு

இனிதான உனதுமடி 
இதமாக வேண்டுதடி
மாமன் மனசும் இங்கு துடிக்குதடி
காற்றோடு கரையுதடி காயம்
இங்கு துடிதுடித்து நிக்குதடி இதயம்


வேலியிட்டு உனைநட்டு
கொத்தும் கிளிக்கூட்டம்
கூச்சலிட்டுப் பறக்குதடி
படபடத்துப் போனதடி என் மனசு


அத்திமரம் நீ என்றால்
கொத்தி கிழித்து உன்பேன் பழமும் நான்
ஆற்றங்கரை ஓரத்து குளிர் காற்றில்
சிலிர்த்து நின்று பழம் உன்பேன்


அத்திப் பழத்து சிவப்பழகும்
அந்தி நேரத்து ஒளியழகும் 
குவிந்து கிடக்குதடி உன் காயம்
நடனமாடும் வயல் வெளியில்
மேய்ந்த நாட்கள் நிணைவு வர,
பாலைவனமாய் வரண்டதடி என் மனசு.


காக்கைபோலாவது குச்சு புறக்கி 
கூடு கட்டி வாழ வைப்பேன் 
என் அழகே
என் காலடியில் சங்கமமாய் வருவாயடி


ஊரும் உறங்கட்டும்
ஊறாரும் உறங்கட்டும்
கடுடவன் பூனையாய் நான் மாறி 
உளாவருவேன் உன் வாசல்


வீனற்றுப் போகாது நம் காதல்
வீன் பழிக்கு விழுந்திடாமல்
புனிதமிகு காதல் தனை 
புறியாத மனிதனிடை
இனி வாழ முடியாது எழிலே
தனியாக ஓடிடலாம் வா இனி.

முன்ஸிப் பரீட்

Thursday, May 19, 2011


இரவின் நிசப்தத்தினிலே………….

சிதறிய முத்துக்கள் போன்று நட்சத்திரங்கள்
மலிந்த கருநீல வானம்,
எனக்கு இப்பொழுதெல்லாம் ஆழம் நிரம்பியதாக
மகோன்னதம் பொருந்தியதாக
விசேட அர்த்தம் கொண்டதாகத் தெரிகிறது.
சுடர் வீசும் தாரகைகளின் அற்புதத் தோற்றத்திலும்,
சந்திரனின் பட்டுப்போன்ற தண்ணொளியிலும்
முன்னெப்போதுமில்லாத சோதிவனப்பையும்
சௌந்தர்ய மாயத்தையும் காண்கிறேன்.
இந்நாட்களில்
ஒளி ஊடுருவும் ஒவ்வொரு நீர்த்துளியிலும்,
தென்றலில் அசையும் ஒவ்வொரு இலையிலும்,
பறக்கும் பட்சி ஜாலங்களின் ஓசையிலும்
புதியதொரு அர்த்தம் புலப்படுகிறது.
இவ்வனுபவங்களால் என் விழிகளில்
நீர்முட்டித் ததும்புகிறது.
இரவின் விசித்திர மாய அமைதி
என்னைச் சிந்தனை உலகில் தள்ளி,
நினைவலைகளில் மிதக்கச் செய்கின்றது.
நான் வானத்தை வெறித்துப் பார்க்கின்றேன்.
இதய ஆழத்திலிருந்தெழும் குரலில்
நான் முணுமுணுக்கின்றேன்.
என் இதயம் விம்மிப் புடைத்து
மார்புக் கூட்டோடு மோதுகின்றது.
விசித்திரமானதோர் ஆன்மீக உணர்வு
என்னை ஆட்கொள்கின்றது.
கண்ணீர்க்கறை படிந்த என் கன்னங்கள்
அனற்பிளம்பாய்க் கொதிக்கின்றன.
விரிந்த வானின் வெறுமையில்,
தாரகைச் சிமிட்டல்களில்
ஒரு முஜாஹித் இன் சாயை தெரிகின்றது.
இருந்திருந்து வீசும் தண்ணிய தென்றல்
மர இலைகளை மாய நடனம் புரிய அழைக்கின்றது.
நிலவொளியில் அசையும் இலைகளின் சுடர் நிழல்கள்
உலகச் சிற்பியின் கற்பனைக்கெட்டா
கலை வண்ணத்தைக் காட்டுகின்றன.
இலைகள் சலசலக்கும் ஓசை,
வானலோகத்துக் கண்ணிகைகளின் தேவகானம் போன்று
என் செவிகளைத் தழுவுகின்றது.
அவ்வளவு இன்பமயம்,
அவ்வளவு கனவு மயக்கம்.
ஆகா! பூமியின் மீது கவிழ்ந்திருக்கும்
இந்த வான் மாடம் எவ்வளவு ஆழமானது?
சந்திரனைச் சுற்றிக் காணப்படும் இந்தப்பரிவட்டம்,
அதில் எழுதப்பட்டுள்ள சொல்லாத கதைகள் எத்தனையோ?
எல்லா இரவுகளை விடவும் இன்றிரவு
இக்கதைகளை என்னால் படிக்க முடிகிறதே, எப்படி?
நிலவே! நீ கண்டவைகளுக்கு நீயே சாட்சி.
உண்மையைச் சொல்.
தனிமையில் அழுது புலம்பும் எத்தனை பேரை நீ அமைதியுடன் அவதானித்திருக்கிறாய்?
இதயத்தில் புதைந்த இரகசியங்களையெல்லாம்
உன்னிடம் அள்ளிக் கொட்டியவர்கள் எத்தனை பேர்?
எத்தனை அப்பாவி உயிர்த்தியாகிகளது
புதை குழிகள் மீது
நீ தண்ணொளி வீசியிருக்கின்றாய்?
ஒடுக்கப்பட்டவர்களும் சிறைக்கூடங்களில் தள்ளப்பட்டோரும்
அல்லாஹ்வை அழைக்கும் ஓலத்தை
எத்தனை தடவைகள் நீ கேட்டிருக்கிறாய்?

ஸாபிரா பரீட்

Monday, May 16, 2011


உடுநுவர அல் மனாரின் அபிவிருத்திக்கு அமைச்சர் எஸ். பி. ரூபா 100 மி. ஒதுக்கீடு

உடுநுவர அல்மனார் தேசிய கல்லூரியின் அபிவிருத்திக்காகக் கண்டிமாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவரும், கௌரவ உயர்கல்வி அமைச்சருமான திரு எஸ். பி .திஸாநாயக்கா இவ்வாண்டு அரசாங்க நிதியிலிருந்து 100 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார். இது பற்றி அமைச்சர், கல்லூரி அதிபர் ஜனாப் எஸ். எம். மீராஸ் ஜே. பி.க்கு அறிவித்துள்ளார்.

அல் மனாரில் நீண்ட காலமாக நிலவிவரும் பௌதிக வளப் பற்றாக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கடந்த இரு தசாப்தங்களாக அரசியல்வாதிகளிடமும், கல்வி அமைச்சர்களிடமும் வலியுறத்தி வந்த போதிலும் அது இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில் அமைச்சர் அவர்கள் அதிமேதகு ஜனாதிபதி திரு மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அரசாங்கத்தின் மூலம் இந்நிதியை ஒதுக்கித் தந்திருப்பதாக அதிபர் தெரிவித்தார்.

அமைச்சர் கடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தல் காலத்தில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் அழைப்பின் பேரில் பாடசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போது பாடசாலையின் குறைபாடுகளைக் கேட்டறிந்த பின்னர் “ தாம் இப் பொதுத் தேர்தலில் அமோக வெற்றி ஈட்டுவதும், முக்கிய அமைச்சர் பதவி ஒன்றைப் பெறுவதும் உறுதி” எனத் தெரிவித்த அமைச்சர், உடுநுவரையின் அபிவிருத்தியின் முதற்கட்டமாக அல்மனாரை அபிவிருத்தி செய்வதற்கு 150 மி. ரூபாவை ஒதுக்கித் தருவதாக வாக்களித்திருந்தார். அதில் ஒரு பகுதியாகவே 100 மி. ரூபாவைத் தற்போது அமைச்சர் ஒதுக்கி இருப்பதாக அதிபர் தெரிவித்தார்.

அல் மனாரில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள போதிலும் முதலில் வகுப்பறை நெருக்கடியைத் தளர்த்துமுகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 15 வகுப்பறைகளைக் கொண்ட மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் திஸாநாயக்காவின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கௌரவ கல்வி அமைச்சர் திரு. புந்துல குணவர்தனா அவர்கள் எதிர்வரும் 2011 ஜூன் 06 திங்கட் கிழமை மு. ப. 11.00 மணியளவில் பங்குபற்ற இருப்பதாகவும் அதிபர் தெரிவித்தார்.

1000 இடைநிலைப் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மத்திய மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள 10 பாடசாலைகளுள் அல்மனார் ஒன்றென்பதும் குறிப்பிடத்கக்கதாகும்.